விஷால் பிறந்த நாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி பட குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஷாலின் மார்க் ஆண்டனி… வெளியான அனல் பறக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அனல் தெறிக்கும் அப்போஸ்டரில் நடிகர் விஷால் தாடி மீசையுடன் கோபத்துடன் கையில் துப்பாக்கியை ஏந்திய படி புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷாலின் மார்க் ஆண்டனி… வெளியான அனல் பறக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!