Vishal in Murugadoss Movie

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கதையில் விஷால் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vishal in Murugadoss Movie : தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளார். தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் ஆவார். நடிப்பதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது விஷால் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ஆக்ஷன் கலந்த திரில்லர் காட்சி படங்களையும் நடித்து ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் களமிறிங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் பல தடைகளை தகர்ந்து புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்த சக்ரா படம் வெளியானது. இந்த படத்தினை தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியிலும் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து விஷாலின் சக்ரா படம் வெளியானது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

தல அஜித் நடித்த தீனா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜயுடன் மீண்டும் தளபதி 65 படத்தில் இணைந்திருந்தார். விஜயுடன் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என வெற்றி படங்களை கொடுத்து மீண்டும் விஜய் உடன் இணைய உள்ள நிலையில் தளபதி 65 படத்தில் இருந்து கருத்து வேறுபாடுகளால் விலகினார்.

அதனை அடுத்து விஜயை வைத்து இயக்குவதாக இருந்த இவர் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்க்கான கதையில் விஷால் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வதந்தியை விஷால் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் எனிமி படம் மலேஷியாவில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.‌ இதில் விஷாலுக்கு வில்லனாக ஆரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அவன் இவன் படத்தை அடுத்து‌ மீண்டும் ஆரியா, விஷால் கூட்டணியில் நடிக்கும் படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.