Vishal in Chakra Trailer Promo
Vishal in Chakra Trailer Promo

விஷாலின் சக்கரா படத்தின் டிரைலர் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vishal in Chakra Trailer Promo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட தகராறில் அவரை படத்திலிருந்து விலகிக் கொண்டார். இதனால் இப்படத்தை விஷாலின் இயக்கி வருகிறார்.

மேலும் எம்எஸ் ஆனந்த் இயக்கத்தில் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

அச்சு அசலாக அப்படியே மாளவிகா மோகனன் போலவே இருக்கும் பெண் – ரசிகர்களை வியக்க வைக்கும் வீடியோ!

மேலும் ரோபோ சங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ட்ரைலர் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.