சாலையோரம் வசிக்கும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விஷாலின் தேவி அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கி உள்ளனர்.

Vishal Helps in TN Lockdown : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

சாலையோரம் வசிக்கும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய விஷாலின் தேவி அறக்கட்டளை.!!

மேலும் தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் உணவில்லாமல் தவித்து வரும் சாலையோர முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுகளை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சாலையில் உள்ள நாய்களுக்கும் உணவு கொடுத்துள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் தேவி அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நடிகர் விஷாலின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.