அக்னி வெயில் தமிழகத்தை போட்டு புரட்டி எடுத்து வரும் நிலையில் விஷால் போட்ட ஆர்டரால் விஷால் மக்கள் இயக்கம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். அது மட்டுமல்லாமல் தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைக்கு வருகிறது. இதனால் வெளியே செல்லும் நாட்கள் தாகம் தணிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு விஷால் தனது மக்கள் இயக்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து மக்களுக்கு நல திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.