நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vishal Complaint on RB Southri : ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் மற்றும் விநோகிஸ்தராக மட்டும் அல்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார், இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனையும் சென்ற ஃபிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார், கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதனால் வரை திரும்ப ஆர்.பி.சவுத்ரி தரப்பு அளிக்கவில்லை என்றும் அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு , செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி அதற்கு பதிலாக ஒரு புதிய அக்ரிமென்ட் 100 ரூ ஸ்டாம் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார்.

இது விஷால் தரப்பிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதால் விஷால் சார்பில் அவருடைய மேனஜர் ஹரிகிருஷ்னன் புகார் மனுவை காவல் துறையிடம் அளித்துள்ளார், அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சவுத்ரி தரப்பு செக் மற்ற இதர ஆவணங்களுக்காக அளித்த 100ரூ ஸ்டாம்ப் அக்ரிமெண்ட் காப்பியும் இணைத்துள்ளார்.

இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.