Vishal Birthday Celebration By Chennai Fans
Vishal Birthday Celebration By Chennai Fans

நடிகர் விஷாலின் பிறந்தநாளை சென்னையைச் சேர்ந்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் கொண்டாடியுள்ளனர்.

Vishal Birthday Celebration By Chennai Fans : தமிழ் திரைப்பட நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். விஷால் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் பாராட்டும் விதமாக நாளை கொண்டாடியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டம்

அதாவது சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள முதியோர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் அவர்கள் உணவு வழங்கி உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தென் சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா அவர்கள் இணைந்து உணவு வழங்கி உள்ளனர்.

விஷால் ரசிகர் மன்ற உறுப்பினர்களின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக துப்பறிவாளன் 2, சக்ரா உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.