ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் நடிகர் விஷால்.

Vishal Birthday Celebration : புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை வரியாக உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையிலும்

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து பிறந்த நாள் கொண்டாடிய விஷால்.!!

முதியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல்,

பெண்களுக்கு தையல் மிஷின், தண்ணீர் குடம்,
அரிசி மூட்டைகள் வழங்குதல்

ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல்

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற
மக்களுக்கு உணவு வழங்குதல்

சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்களை மீட்டு சுத்தப்படுத்தி முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன்,

மக்களுக்கு பயனடையும் வகையில் நல திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்கள்

அதிசயமே அசந்து போகும், ஜராவதேஸ்வரர் கோவில்.!

அதுமட்டுமின்றி நேற்று விஷால் பர்த்டே காமன் டிபி ( Vishal birthday common DP ) என்ற தலைப்பில் ஹாஷ்டேக் ( Hashtag) மற்றும் புகைப்படமும் இந்திய அளவில் 12 நிமிடங்களில் ட்விட்டரில் ( Twitter ) முதலிடம் பிடித்தது.

வடிவேலு Sir கூட சேர்ந்து ஒரு கலக்கு கலக்க போறோம் – மகிழ்ச்சியில் போண்டா மணி..! | Vadivelu RE – ENTRY

அதே போல் நடிகர் விஷால் அவர்கள் தனது பிறந்த நாளில் சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், கெல்லீஸ் பகுதியில் உள்ள சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு அருந்தியும் மகிழ்ந்தார் அவர்களுடன் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் கண்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்