விபத்தில் சிக்கிய விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய விஷால்.. மருத்துவமனையில் அனுமதி - வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று காலை படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால் விபத்தில் சிக்கியுள்ளார். இதனை எடுத்து அவரை மீட்டெடுத்த படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது விஷால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய விஷால்.. மருத்துவமனையில் அனுமதி - வெளியான அதிர்ச்சி தகவல்

இதற்கு முன்னதாக லத்தி படப்பிடிப்பிலும் விஷால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.