பிரபல நடிகர்களின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Vishal 32 Pooja Photos : விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள்.

பிரபல நடிகர்களின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - வைரலாகும் போட்டோஸ்.!!

நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தை நடிக்கிறார் விஷால்.

குத்துச்சண்டை : 8 தங்கம் உள்பட, 19 பதக்கம் வென்றது இந்தியா

இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் மூலம் முதன் முறையாக விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! | Velavan Stores

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறார்.

வசனம்: A.வினோத்குமார்/பொன் பார்த்திபன். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.