நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய hd புகைப்படங்களை எக்ஸ்க்ளூசிவ்வாக விகடன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.