பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் : தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில், தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்றவை அதிகம் பரவி வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்த, அங்காளி என்பவர் பன்றிக்காய்ச்சல் வந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மதுரையை சேர்ந்த லட்சுமி, திருமங்கலத்தில் சேர்ந்த சுப்புலட்சுமி ஆகிய 2பெரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

இவ்வாறு ஒரே நாளில் இந்த 5 பெரும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம், ” தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கடந்த ஆண்டு 3800பேர் பன்றிக்காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 1700 பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், காய்ச்சலை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் யாருக்கேனும் நோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்” என கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here