எட்டு நாளில் விருமன் பட சாதனையை முறியடித்துள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்பட வசூல்.

Viruman Vs Thiruchitrambalam Movie Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் வசூல் சாதனை செய்து வருகிறது.

8 நாளில் விருமன் வசூல் சாதனையை முறியடித்த திருச்சிற்றம்பலம் - இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல்??

இந்த நிலையில் இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் 15 நாள் வசூலை 8 நாளில் முறியடித்துள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இதை இரண்டு படங்களில் மொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

8 நாளில் விருமன் வசூல் சாதனையை முறியடித்த திருச்சிற்றம்பலம் - இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல்??

அதாவது விருமன் திரைப்படம் 15 நாளில் ரூ 63 கோடிகள் வசூல் செய்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் 8 நாளில் ரூ 68 கோடிகள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.