Virender Sehwag
Virender Sehwag

Virender Sehwag – சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வானம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அஹமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி தாக்குதலை நடத்தினார்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு உலகநாடுகள் மற்றும் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசிய மரியாதையோடு அஞ்சலி செலுத்தப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட்டது.

அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தனிநபர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளனர். பலரும் பல வகைகளில் உதவி செய்து உள்ளனர் தொடர்ந்து உதவுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் இந்த தாக்குதல்க்கு பதில் தாக்குதல் தர வேண்டும் என்றும் பலரது கருத்தாக உள்ளது.

அந்த வகையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து உள்ளார். “என்ன செய்தாலும் அது ஈடாகாது.

ஆனால் என்னால் செய்ய முடிந்த சிறு உதவியாக உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்கிறேன்.

என்னுடைய சேவாக் சர்வதேசப் பள்ளியில் படிக்க வைக்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

சேவாக்கின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றது.