Virat Kohli's record!
Virat Kohli's record!

ஒரு அணியின் கேப்டனாக 5000 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கு கிடைத்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராத் கோலி கேப்டனாக மட்டுமே 5000 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளார்.

இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் என்ற பெருமையும் கேப்டனாக 5000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் உலக அளவில் 6வது இடத்தையும் விராத் கோலி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ஆஸ்திரேலியாவின் பாய்ண்டிங், மேற்கிந்திய தீவுகளின் லாயிடு மற்றும் நியூசிலாந்தின் பிளம்மிங் ஆகியோர் கேப்டனாக 5000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.