Virat Kohli Test Match
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சென்ற ஒரு வருடமாக முதல் இடத்தில் இருந்தார். மீண்டும் முதல் இடம் பிடிப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

Virat Kohli Test Match : ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், தடைக்குப்பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பி உள்ளார். அவர் டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் 937 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு இறங்கினார்.

பிசிசிஐ புதிய தலைவராக கங்குலி நியமனம் .!

இந்நிலையில் புனேயில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்து இருந்தார்.

இதனால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here