virat kohli speech
virat kohli speech

virat kohli speech – நேற்று நடந்து முடிந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பெர்த் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களையே சாரும், அனைத்து பெருமைகளும் பாராட்டுகளும் சிறப்பாக பந்து வீசியவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது : ஆஸ்., அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பாட்டனர்.

பும்ரா பந்து வீச்சிற்கு பலன் கிடைக்காமல் இருந்து இருந்தால் அது மிக பெரிய பிழையாகிவிட்டு இருக்கும்.

அணி நிர்வாகம் பும்ரவை அமைதிப்படுத்தி, அவருக்கு தொடர்ந்து பந்து வீச, சிறப்பாக செயல்பட செய்தனர்.

அதனால், அவரின் பந்து வீச்சில் ஒரு ஒழுங்கு இருந்தது. தொடர்ந்து விக்கெட் வீழ்த்த அதுவே காரணமாக அமைந்தது.

மற்றும், பந்து வீச்சாளர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடாமல் அனைவரும் ஒற்றுமையாக பந்து வீசியதினால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது.

மற்றும் அவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அணியிக்கு தேவையான சமயத்தில் அவர்களின் நுட்பமான பந்து வீச்சு, பெரிய திருப்பு முனையாக இருந்தது. மற்றும் அவர்களின் பழைய பந்து, புதிய பந்து வீச்சு முறை என மாற்றி மாற்றி பந்து வீசிய முறையால் ஆஸ், அணி வீரர்கள் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காமல் ஆட்டமிழந்தனர்.

அடுத்து, தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அபாரமாக தொடங்கினார். மேலும் விஹாரி மற்றும் ரோகித் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்.

இதனை தொடர்ந்து, இறுதி ஆட்டத்தையும் வெற்றி பெரும் முனைப்பில் உள்ளோம். அதற்காக கடும் பயிற்சி செய்வோம்.

கோப்பையையும் தக்க வைப்போம் என்றும், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இந்த வெற்றியில் பெருமையும் புகழும் சேரும் என்றும் கூறினார்.