Virat kohli is a Legend of the Game : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Virat kohli is a Legend of the Game :

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டிக்கு முன் 416 இன்னிங்சில் 19963 சர்வதேச ரன்கள் குவித்திருந்தார்.

37 ரன்கள் அடித்தால் விரைவாக 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்யலாம் என்ற நோக்கத்துடன் இன்றைய போட்டியில் களம் இறங்கினார்.

அவர் ஹோல்டர் வீசிய 25-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தபோது 37 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்னைத் தொட்டர்.

இதனால் விரைவாக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி டெஸ்டில் 6613 ரன்களும் (131), 20 ஓவர் போட்டியில் 2263 ரன்களும் (62) எடுத்து உள்ளார்.

20 ஆயிரம் ரன்னை விராட் கோலி 417-வது இன்னிங்சில் கடந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், லாரா 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது.

லைவில் வந்த சூர்யாவிடம் இதெல்லாமா கேட்பாங்க – #AskSuriya-ல் நடந்த அக்கப்போர்கள்.!

அதை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் 20 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தார்.

இந்த ரன்னை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெறுவார்.

தெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்ந்து 34,357 ரன் எடுத்து (782 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 24,208 ரன்னுடன் (509 இன்னிங்ஸ்) 6-வது இடத்தில் உள்ளார்.

இவர்கள் வரிசையில் கோலியும் இணைந்துள்ளார். சங்ககரா (28,016 ரன்) 2-வது இடத்திலும், பாண்டிங் (27,483) 3-வது இடத்திலும் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.