விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் செந்தில் கணேஷ் தேர்வாகி இருந்தார். இதனையடுத்து அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். தற்போது தன்னுடைய ரசிகை ஒருவருடன் சேர்ந்து தன்னுடைய பாடலுக்கு டப்மேஷ் செய்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.