விருமன் திரைப்படத்தின் மதுரை வீரன் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

கொம்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பி ஜி முத்தையா மற்றும் கார்த்தியின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் விருமன். இதில் கார்த்திக்கு இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.

இணையத்தில் வெளியான மதுரை வீரன் பாடல் வீடியோ.. உற்சாகத்துடன் கண்டுகளிக்கும் ரசிகர்கள்.!

முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வசூல் பெற்ற நிலையில் உலகம் முழுவதும் எட்டு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. மேலும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்கில்

இணையத்தில் வெளியான மதுரை வீரன் பாடல் வீடியோ.. உற்சாகத்துடன் கண்டுகளிக்கும் ரசிகர்கள்.!

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடி இருக்கும் மதுரை வீரன் என்ற பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருவதோடு இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கியும் வருகின்றனர்.

Viruman - Madura Veeran Video | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya