விஜய் டிவி பிரபலமான ஜாக்குலின் பரபரப்பான வாக்குமூலம் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் ஜாக்குலின். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் இதனை தொடர்ந்து சில ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு இருந்தார். அதை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி.ஏ.பி.எல் என்ற பிரபல சீரியலில் சூப்பராக நடித்து பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

என்னால முடியல மூச்சு வாங்க வெளியிட்ட வாக்குமூலம் - ஜாக்குலின் பரபரப்பான வீடியோ பதிவு.!

அந்த சீரியல் முடிந்த பிறகு எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த ஜாக்குலின் தற்பொழுது உடல் எடை குறைப்பதற்காக அதிக முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

என்னால முடியல மூச்சு வாங்க வெளியிட்ட வாக்குமூலம் - ஜாக்குலின் பரபரப்பான வீடியோ பதிவு.!

அந்த பதிவில், என்ன ரொம்ப கொடும படுத்துறாங்க… என்னால சுத்தமா முடியல… மூச்சு வாங்குது வாந்தி எடுக்கிறேனு சொன்னாலும் போய் எடுத்திட்டு வானு சொல்றாங்க லங்ஸ் எல்லாம் வலிக்குது ஆனா அது நார்மல்னு சொல்றாங்க என்று ஜிம்மில் அமர்ந்து கொண்டு மூச்சு வாங்க கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமின்றி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.