நடுரோட்டில் குழந்தை போல் உடைய அணிந்து கொண்டு இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருக்கும் முன்னணி நடிகை ஹன்சிகாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

குழந்தை உடையில் நடுரோட்டில் ஆடி காட்டும் ஹன்சிகா - வெளியான வைரல் வீடியோ.!!

இவர் தற்பொழுது முதன்மை கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதனால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி அவ்வப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்திலும் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் குழந்தை போல் சிறிய உடையை அணிந்து கொண்டு நடுரோட்டில் இங்கு அங்கும் ஆடியபடி எடுத்திருக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.