வெளிநாட்டிற்கு சென்று இருக்கும் பிரியங்கா தேஷ் பாண்டே நடுரோட்டில் நின்று கொண்டு டான்ஸ் ஆடும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் 10 வருடங்களாக பிரபல தொகுப்பாளினியாய் பணியாற்றிக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. தனது தனித்துவமான காமெடி மூலம் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து நிகழ்ச்சியை நடத்தி வரும் இவர் பல ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினி ஆவார்.

மேலும் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது வெளிநாட்டில் நடுரோட்டில் நின்று கொண்டு டான்ஸ் ஆடும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.