இயக்குனர் அட்லீ மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளபதி விஜயின் புகைப்படம் வைரல்.

கோலிவுட் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

பிரியா - அட்லீ தம்பதியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்!!… வெளியான வைரல் புகைப்படங்கள் இதோ.!

தற்போது இவர் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உறுதி செய்திருந்தார்.

பிரியா - அட்லீ தம்பதியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்!!… வெளியான வைரல் புகைப்படங்கள் இதோ.!

இந்நிலையில் அட்லியின் மனைவி பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்டு அட்லீ – பிரியா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.