Viral Photo of Pugazh Weds Ramya

விஜய் டிவி புகழ் மற்றும் ரம்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது போல திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Viral Photo of Pugazh Weds Ramya : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி ரம்யா.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா தற்போது வெள்ளித்திரையில் நடிகையாக நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பேராசிரியராக நடித்திருந்தார்.

ஆண் தேவதை என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ரம்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்து கொண்டார்.

இப்படியான நிலையில் ரம்யாவுக்கும் குக்கு வித் கோமாளி புகழ்க்கும் திருமணம் நடந்து முடிந்தது போல திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர். ஆனால் இது போலி புகைப்படம். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக யூட்யூப் சேனல் ஒன்றை உருவாக்கிய புகைப்படம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இருப்பினும் இது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.