ஏர்போர்ட்டிற்கு சென்ற வடிவேலு அங்குள்ள ஊழியர்களிடம் நகைச்சுவையுடன் பேசி நடந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு வைகை புயல் என்று அழைக்கப்படும் மாபெரும் காமெடி நடிகர் தான் வடிவேலு. காமெடியில் அடிச்சுக்க இவரை தவிர ஆளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவரது காமெடிகளை இன்று வரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஏர்போர்ட் ஊழியர்களிடம் நகைச்சுவையுடன் நடந்து கொண்ட வடிவேலு.!! - ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம்.!

கோலிவுட் திரை வட்டாரத்தில் காமெடிக்கு பேர் போன நடிகர்கள் பலர் இருந்தாலும் பல பேரோட பேவரட் காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு தான். சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு விஷாலின் கத்தி சண்டை என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஏர்போர்ட் ஊழியர்களிடம் நகைச்சுவையுடன் நடந்து கொண்ட வடிவேலு.!! - ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம்.!

அதனைத் தொடர்ந்து தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் உதயநிதியின் மாமன்னன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 போன்ற படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு சமீபத்தில் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அங்குள்ள ஊழியர்களிடம் தனது நகைச்சுவை மூலம் அவர்களிடம் பேசி அசத்தியுள்ளார்.

ஏர்போர்ட் ஊழியர்களிடம் நகைச்சுவையுடன் நடந்து கொண்ட வடிவேலு.!! - ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம்.!

அதாவது வடிவேலு ஏர்போர்ட்டில் இருந்த ஊழியர்கள் அனைவரிடமும் சிரித்து கலகலப்பாக பேசி செல்பியும் எடுத்துள்ளார். மேலும் அங்கே மொட்டை அடித்துள்ள பெண் ஒருவரின் தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்து, சிரிக்க வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர்போர்ட் ஊழியர்களிடம் நகைச்சுவையுடன் நடந்து கொண்ட வடிவேலு.!! - ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம்.!