தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், தளபதி 67 படத்திற்கான அப்டேட் இன்று மாலை 6:07 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுடன் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.