விஜய் தேவர் கொண்டா அவரது சுற்றுப்பயணத்தின் நலம் கருதி அவர் அம்மா செய்திருக்கும் சிறிய பூஜை குறித்த பதிவு ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர் கொண்ட தற்போது நடித்திருக்கும் திரைப்படம் தான் “லைகர்”. இவர் இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார். இதில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டீசர் போன்றவற்றை ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் விஜய் தேவர் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மா செய்துள்ள பூஜை குறித்து பதிவு ஒன்றே புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் ஏற்கனவே இந்த மாதம் முழுவதும் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் ஆனால் என் அம்மா எங்களுக்கு பாதுகாப்பு தேவை என சிறு பூஜை ஒன்றை நடத்தினர், இப்போது நாங்கள் எங்களது பயணத்தை தொடர்கிறோம், எங்கள் அம்மா நிம்மதியாக இருப்பார்’ என நினைக்கிறேன் என்று அப்பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.