பிரபல இயக்குனரான லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லிங்குசாமி. இவர் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் என்னும் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனர் ஆனார்.

அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, பையா, அஞ்சான், தி வாரியர் போன்ற படங்களின் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருகிற. மேலும் திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி செக் மோசடி செய்ததாக பிவிபி நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையை நீதிபதி விதைத்திருக்கிறார். இதை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அதிர்ச்சி தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.