விஜய்யின் கேரக்டரை திருடுவேன் என்று பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் என பல நட்சத்திர திரைப்படங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் குறித்து பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது பிகில் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை இந்துஜா சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் “விஜய் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், அனைவரிடமும் சகஜமாக பழகுவார். எல்லாருக்கும் சம மரியாதை கொடுப்பார். அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும், இது போன்ற பல விஷயங்களை அவரிடம் இருந்து திருடன் விரும்புகிறேன்” என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.