விஐபி படத்தால் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIP Movie Issue : தமிழ் சினிமாவில் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் விஐபி. அதாவது வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். மேலும் அனிருத் படத்திற்கு இசையமைக்க நடிகர் தனுஷ்தான் தன்னுடைய சொந்த தயாரிப்பில் இந்த படத்தை தயாரித்தார்.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்’

விஐபி படத்தால் வந்த சோதனை.. தனுஷ் மீது பாயும் சட்ட நடவடிக்கை - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதுபோன்ற காட்சிகளில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு போன்ற வாசகங்கள் இடம் பெறவில்லை. இதனால் விதிமுறைகளை மீறி இந்த படத்தில் காட்சிகளை வைத்திருப்பதாக தனுஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தனுஷிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Chennai-யை தூள் கிளப்பும் Shobha Textiles – அசத்தல் Diwali Offers..! | V.J.Swathy

தற்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தனுசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது தொடர் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் தனுஷ் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.