திருமண கோலத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வினுஷா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் வினுஷா தேவி. இதனைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பனி விழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வினுஷா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.