வலிமை படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு செக் வைத்துள்ளார் இயக்குனர் வினோத்.

Vinoth Reply to Metro Producer : தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்க அந்தப் படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனையடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் வலிமை என்ற படத்தை இயக்கிய வினோத் தற்போது மீண்டும் அஜித்தை இயக்க உள்ளார்.

வலிமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிலையில் இந்த படத்தில் கரு எங்களது படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த படத்தின் OTT ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து வலிமை படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இப்படியான நிலையில் தன் மீது வீண்பழி போட்ட தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்க போவதாகவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.