Vinoth and Lokesh Meeting

வலிமை வினோத்தும் மாஸ்டர் லோகோஷ் கனகராஜூம் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vinoth and Lokesh Meeting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மீண்டும் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் தல அஜித் நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை எச் வினோத் இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வினோத் மற்றும் லோகோஷ் கனகராஜூம் சந்தித்து கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த சந்திப்பு என தெரிவித்துள்ளார் லோகேஷ்.

இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.