தளபதி விஜய்யை இயக்கப் போவது எப்போது என வலிமை படத்தின் இயக்குனர் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

Vinoth About Join With Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

சதுரங்க வேட்டை இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பிறகு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார்.

பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 3வது முறையாகவும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படம் வெகு விரைவில் தொடங்க உள்ளது.

டெஸ்ட் மேட்ச் வீரர்களுக்கு கொரோனா? : மீதி 3 நாள் ஆட்டம் நடைபெறுமா?

இந்த நிலையில் வினோத் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யுடன் இணைவது எப்போது என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு வினோத் ஏற்கனவே 3 முறை விஜய் சாரை சந்தித்தேன். இரண்டு முறை கதை சொல்லி அனுப்பிவிட்டேன் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நல்ல முறையில் கதை சொல்லி அவரை இயக்குவேன் என கூறியுள்ளார்‌.

இவருடைய இந்த பேட்டி விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.