Vinayagar Channathi

☆ மக்களில் பலர் வீட்டின் முகப்பில் விநாயகர் சன்னதி அமைத்து வணங்குவதை நாம் பார்த்திருப்போம். கோயில் போலவே பக்தியுடன் வழிபாடு செய்வர். இவ்வாறு அமைப்பது சரியா? தவறா?.

☆ விநாயகர் சன்னதி, வீட்டின் முகப்பில் அமைக்கக்கூடாது. பொதுவாக விநாயகரின் முன்பக்கம் செல்வத்தையும், பின்பக்கம் வறுமையையும் குறிக்கும். வீட்டின் முகப்பில் விநாயகரை பிரதிஷ்டை செய்யும் போது, விநாயகர் நமது வீட்டின் பக்கம் முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல. அதனால்

* வீட்டை விட்டு சற்று அடி தள்ளி அமைத்துக்கொள்ளலாம்.
* விநாயகரை தெற்கு திசையில் வைத்து வணங்குதல் கூடாது.
* கிழக்கு அல்லது மேற்கு திசையில் அமைத்து வழிபடுதல் நல்லது.
* படிக்கட்டின் கீழே விநாயகரை பிரதிஷ்டை செய்தல் கூடாது.
* வீட்டின் கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்க கூடாது.

☆ முக்கியக் குறிப்பு:
விநாயகர் சிலையை திருடி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நல்லது என்று கூறுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். அவை நன்மை செய்யாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here