Vinayagar

Vinayagar : விநாயகருக்கு எலி ஏன் வாகனமாக மாறியது?

பெரிய தொந்தி வயிறு கடவுளான விநாயகர் ஏன் ஒரு சின்ன சுண்டலி மீது பயணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் பெரிய ஆவல் இருக்கும்.

அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும்.

விநாயகர் புராண கதை:

☆ விநாயகரின் எலி, கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்தது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர்.

☆ இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார்.

☆ இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது.

 ☆ க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது.

☆ உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது. இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அங்கு ராட்சஷ எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார்.

☆ தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷிவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார்.

☆ அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது.

☆ அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here