விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திவேல் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இன்று சரஸ்வதிக்கு பிறந்தநாள், எனவே நேற்று காவலர் கார்த்திவேல் சென்னையில் இருந்து கிளம்பி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்த, அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இன்று சரஸ்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க இருவரும் சந்தித்து உள்ளனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, கார்த்திக் துப்பாக்கியால் சரஸ்வதியை தலையில் சுட்டு கொன்று கொலை செய்துள்ளார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சரஸ்வதியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது . கொலை செய்யபட்ட சரஸ்வதி மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.