பிரபல தமிழ் வில்லன் நடிகர் காளிதாஸ் உடல்நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

Villian Actor Kaalidas Death : தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தவர் காளிதாஸ். வில்லனாக பல படங்களில் மிரட்டியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு பிரபலங்கள் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.