Vikram’s Getup in Ponniyin Selvan : Manirathnam, Vikram, Keerthy Suresh, Jayam Ravi, Karthi, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vikram’s Getup in Ponniyin Selvan :

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனில் நடிப்பது ஏன்? – முதல் முறையாக மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்.!

இப்படத்தின் திரைக்கதை ஆசியர்களில் ஒருவராக இளங்கோ குமாரவேலும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்த சிவா ஆனந்தும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரமின் கெட்டப் என்னவென்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அண்மையில் நடிகர் சங்க தேர்தலுக்கு விக்ரம் வெள்ளை தாடி வெள்ளை தலைமுடியுடன் வந்திறங்கினார்.

அதுதான் பொன்னியின் செல்வனில் விக்ரமின் கெட்டப்பாம். அதேபோல் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்திலும் விக்ரமின் கெட்டப் இதுதானாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.