லோகேஷ் கனகராஜின் செயல்பாடு தளபதி 65 படத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Vikram Vs Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் வெற்றி பெற்றது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

தளபதி 65 படத்துக்கு சிக்கலை ஏற்படுத்திய லோகேஷ் கனகராஜ் - வெளியான ஷாக் தகவல்

லோகேஷ் கனகராஜ் தற்போது அவருடைய குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 2022 பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே தினத்தில்தான் தளபதி விஜய் தளபதி 65 திரைப்படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள இந்த இரண்டு படங்கள் வெளியானால் நிச்சயம் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.