Vikram Vedha Hindi Remake Update

இந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Vikram Vedha Hindi Remake Update : தமிழ் சினிமாவில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா.

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கின. மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியை தழுவியது.

இதனால் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது படக்குழு மீண்டும் ரித்திக் ரோஷனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

ரித்திக் ரோஷன் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக பாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி அவர்களே இயக்க தமிழில் படத்தை தயாரித்த சசிகாந்த் இந்தியிலும் பிரபல நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.