Vikram Revealed Secrets About Adhithya Varma : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Dhruv Vikram

ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான கபீர் சிங் படத்திற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது விக்ரம் சில சீக்ரெட் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Vikram Revealed Secrets About Adhithya Varma : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம்.

இவருடைய மகன் துருவ் விக்ரம் தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அர்ஜுன் ரெட்டியின் உதவி இயக்குனரான கிரிஷாயா இயக்கியுள்ளார்.

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

இப்படத்தின் ஹிந்தி ரீமேக் சமீபத்தில் திரைக்கு வந்தது, இந்த படத்தில் காதலியை காதலன் தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் லாஜிக் இல்லாத ஒன்று விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனரும் காதலில் அடி வாங்குவதெல்லாம் சகஜம் தானே என கூறியது மேலும் சர்ச்சையை கூட்டியது. இந்நிலையில் தற்போது விக்ரம் தமிழ் ரீமேக் குறித்து பேசியுள்ளார்.

ஆதித்ய வர்மா நீங்கள் நினைப்பது போல இல்லை. மிகவும் சாஃப்டானவர். ஆதித்ய வர்மா அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போல இருக்க மாட்டார் என கூறியுள்ளார்.

மற்ற இருவருடன் ஒப்பிடும் போது ஆதித்ய வர்மா கல்லூரி மாணவர் போல தான் இருப்பார் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.