Vikram's Next

Vikram’s Next : மெகா ஹிட் இயக்குனருடன் தன்னுடைய அடுத்த படத்திற்காக நடிகர் விக்ரம் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினெம்மாவில் திறமையாகவும் முழு ஈடுபாட்டுடனும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். எந்தவொரு படமாக இருந்தாலும் அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விடுவது விக்ரமின் இயல்பு.

இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும் ரூ 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. ஆம், இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுமே மெகா ஹிட் என்பதால் இப்படமும் மிக பெரிய வெற்றி பெரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.