Vikram Nephew's First Movie
Vikram Nephew's First Movie

முதல் படத்திலேயே விக்ரமின் மருமகன் 5 வேடங்களில் 5 கதாநாயகிகளுடன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vikram Nephew’s First Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திறமையான ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது ஒரே மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை நிரூபித்தார். துருவ் விக்ரமை தொடர்ந்து விக்ரமின் மருமகன் அதாவது விக்ரமின் சகோதரியின் மகன் அர்ஜுமன் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

தாதா 87 படத்தின் இயக்குனரான விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகி வரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தில் நடித்து வருகிறார் அர்ஜுமன்.

குழந்தையுடன் க்யூட்டான வீடியோவை வெளியிட்ட ஆலியா மானசா – எப்படி எல்லாம் ரியாக்ஷன் கொடுக்குது பாருங்க!

இந்த படத்தில் அவர் மொத்தம் ஐந்து வேடங்களில் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் புதுமுக நாயகிகளுடன் இணைந்து பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஜூலி ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

விக்ரமின் சகோதரி மகனின் முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துருவ் தன்னுடைய திறமையை நிரூபித்தது போல அர்ஜுமன் விக்ரம் பெயரை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.