வேற லெவல் வெறித்தனமாக கமல் விஜய் சேதுபதி சூர்யா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பும் மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நரேன் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் : கர்ணல் விக்ரம் ஆக வரும் கமல்ஹாசனை தன்னுடைய அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கிறார் காளிதாஸ் ஜெயராம். இப்படி படம் தொடங்க காளிதாஸின் மகனை தாத்தாவாக இருந்து பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார் கமல்.

இந்த நிலையில் திடீரென காளிதாஸ் மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகு கமலையும் கொல்லப் படுவது போல காட்டப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக பஹத் பாஸில் படத்தில் நடித்துள்ளார். முட்டை கண்களுடன் மிரட்டும் நடிப்பு படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

இன்னொரு பக்கம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபராக சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பவானிக்கு போட்டியாக சந்தனம் கதாபாத்திரம் அமைந்துள்ளது. 3 மனைவிகளுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.

முகமுடி அணிந்து கொலைகளைச் செய்யும் அந்த மர்ம நபர் யாரென்று பாஸில் அலசி ஆராய அவருக்கு இன்டர்வல் ப்ளாக்கில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மகனை கொன்றவர்களைப் பழிவாங்க கமல் துடிக்கிறார் என்று பார்த்தால் அதில் பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. இப்படி கொஞ்சம் கணிக்க முடியாத கதைக்களத்துடன் விக்ரம் திரைப்படம் அமைந்துள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் படு மிரட்டல்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படத்தில் நடித்துள்ள கமல், பஹத் பாஸில், விஜய் சேதுபதி, சூர்யா என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்து தன்னுடைய திறமையை நிலைநாட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அனிருத்தின் இசை அனல் பறக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கிரிக்ஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் பக்காவாக அமைந்துள்ளது.

குறைகள் :

கைதி படத்தைப் பார்க்காதவர்கள் இந்த படம் கொஞ்சம் புரியாமல் போகலாம்.

சில காட்சிகள் தேவை தானா என்று எண்ண வைக்கிறது.

REVIEW OVERVIEW
விக்ரம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
vikram-movie-reviewமொத்தத்தில் விக்ரம் வேற லெவல் வெறித்தனம்.