நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மீண்டும் மற்றொரு ஓ டி டி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்,சூர்யா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

நாயகன் மீண்டும் வரார்!!! மற்றொரு ஓ டி டி தளத்தில் வெளியாகும் விக்ரம்!! - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

தமிழில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படம் கடந்த ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியிட்ட பின்பும் இப்படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ள நிலையில் மீண்டும் இப்படத்தை மற்றொரு பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட உள்ளது.

நாயகன் மீண்டும் வரார்!!! மற்றொரு ஓ டி டி தளத்தில் வெளியாகும் விக்ரம்!! - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

அதாவது விக்ரம் திரைப்படத்தை பிரபல ஓ டி டி நிறுவனமான ZEE5 தமிழ் ஓ டி டி தளத்தில் இப்படம் நாளை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.