ஷூட்டிங் ஆரம்பித்த சில மாதத்திலேயே லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம் விற்பனையாகி உள்ளது.

Vikram Movie Hindi Dubbing Rights : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அந்தப் படத்தைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர் என இரண்டு படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பகத் பாசில் விஞ்ஞானியாக நடித்து வரும் விக்ரம் படத்தினை இயக்கி வருகிறார்.

ஷூட்டிங் ஆரம்பித்த சில மாதத்திலேயே விற்பனையான லோகேஷ் கனகராஜ் விக்ரம் - அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா??
அதிமுக கூறுவது சரியல்ல : அமைச்சர் துரைமுருகன்

இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சுமார் 71 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் படம் தொடங்கிய மாதங்களிலேயே இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மேன் மைண்ட் என்ற நிறுவனம் ரூபாய் 31 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions | Valimai First Single