Vikram Movie Cinemagraphter

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் இருந்து மாஸ்டர் பட பிரபலம் விலகி கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக சர்க்கார் படத்தில் பணியாற்றிய கலைஞர் இணைந்துள்ளார்.

Vikram Movie Cinemagraphter : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லாக் டவுன் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்புகளை மொத்தமாக முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக மாஸ்டர் படத்தில் பணியாற்றிய சத்தியம் சூரியன் இணைந்திருந்தார். ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக சர்க்கார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரீஸ் கங்காதரன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.