Vikram LinguSamy Combo : Latest Update is Here.! | Vikram | Chiyaan Vikram | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Updates
இவரும் லிங்குசாமியும் தற்போது ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே பீமா படத்தில் இணைந்த இவர்களுக்கு இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Vikram LinguSamy Combo : நூறாண்டுகளைக் கடந்த தமிழ் சினிமாவில் நடிப்பு எனும் வார்த்தையைக் கேட்டால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் சிவாஜி. பின் அவர் வழியில் வந்த கமல், சிவாஜியின் கலையுலக வாரிசாக போற்றப்பட்டார்.

அதன்பின், இனி சிவாஜி, கமல் போல நடிப்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகரை பார்க்க முடியுமா என பரவலாக எழுந்த கேள்விக்கு விடையாக வந்தவர் விக்ரம்.

கடாரம் கொண்டான் குறித்த இன்னொரு ஸ்பெஷல் அப்டேட் – டிரெண்டாடும் புதிய புகைப்படம்!

எத்தனையோ கடினமான வேடங்களை ஏற்றிருந்தாலும் ஒவ்வொரு படம் முடிந்த பின்பும் ‘அதுக்கும் மேல’ என அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் விக்ரம், ஒரு சராசரி நடிகர் மட்டுமல்ல.. அவர் ‘அதுக்கும் மேல’.

இப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்வியில் தத்தளித்து வருகிறார். இந்நிலையில் இவரும் லிங்குசாமியும் தற்போது ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கின்றனர்.

ஏற்கனவே பீமா படத்தில் இணைந்த இவர்களுக்கு இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.